Thangalaan: விபத்துக்கு பிறகு மீண்டும் பார்முக்கு திரும்பிய விக்ரம்: வெறித்தனமான 'தங்கலான்' லுக்.!

விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. கோலிவுட் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக இந்தப்படம் வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பின் போது நடிகர் விக்ரம் விபத்தில் சிக்கினார். இதனால் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஓய்வில் இருந்தார். இந்நிலையில் தற்போது உடல் நிலை முழுமையாக குணமடைந்துள்ள விக்ரம் மறுபடியும் ‘தங்கலான்’ படப்பிடிப்பிற்காக தயாராகிவிட்டார்.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
‘தங்கலான்’ படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே மும்முரமாக நடந்து வந்தது. இதனிடையில் சமீபத்தில் படப்பிடிப்பில் ஒத்திகையில் ஈடுபட்டார் விக்ரம். அப்போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் விக்ரமுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பை சிறிது காலம் ஒத்தி வைத்தனர் படக்குழுவினர். விக்ரமும் வீட்டில் முழுமையான ஓய்வில் இருந்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் ஓய்விற்கு பிறகு மறுபடியும் பார்முக்கு திரும்பியுள்ளார் விக்ரம். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒயிட் டீஷர்ட், தலையில் மங்கி கேப் என மாஸான லுக்கில் விக்ரம் இருக்கும் ஸ்டைலிஷான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் விரைவில் மறுபடியும் விக்ரம் ‘தங்கலான்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார் விக்ரம்’ கடந்தாண்டு பூஜையுடன் விக்ரமின் 61 வது படமாக ‘தங்கலான்’ படப்பிடிப்பு துவங்கப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப்படத்தை தயாரித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். விக்ரமின் நடிப்பில் வேறலெவலில் இந்தப்படத்தை இயக்கி வருகிறார் பா. ரஞ்சித்.

Nayanthara: முதல் திருமண நாளில் நயன்தாராவை அழ வைத்த விக்கி: தீயாய் பரவும் வீடியோ.!

‘தங்கலான்’ படத்தை கேஜிஎப் குறித்த உண்மை வரலாற்றை கூறும் விதமாக இயக்கி வருகிறார் பா. ரஞ்சித். பீரியட் பிலிமாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தப்படத்தில் விக்ரமுடன் பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் முழுமையாக நிறைவடையும் என கூறப்படுகிறது.

‘தங்கலான்’ படத்திற்காக நீண்ட தாடி, முடி என மாஸான லுக்கில் வலம் வருகிறார் விக்ரம். இதனிடையில் ரஜினி நடிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைவர் 170’ படத்தில் வில்லனாக நடிக்க விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தப்படத்திற்காக லைகா நிறுவனம் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பேசியும் கூட விக்ரம் வில்லனாக நடிக்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Rajini: ‘தலைவர் 170’ படத்தில் இணையும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்: அதுவும் 32 ஆண்டுகளுக்கு பிறகு.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.