லாஸ் ஏஞ்சல்ஸ்: அச்சு அசல் டாம் க்ரூஸ் போலவே இருக்கும் 2 நபர்களுடன் நடிகர் டாம் க்ரூஸ் எடுத்துக் கொண்ட போட்டோ என்கிற பெயரில் ஒரு அதிர்ச்சியூட்டும் புகைப்படம் இணையத்தில் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் மிஷன் இம்பாசிபிள் படங்களில் நடித்து பிரபலமானவர். அதன் 7வது பாகமானா டெத் ரெக்கனிங் படம் விரைவில் வெளியாக உள்ளது.
சமீபத்தில், அந்த படத்திற்காக நடிகர் டாம் க்ரூஸ் 6 மாத காலங்கள் கஷ்டப்பட்டு ஒரே ஒரு உயிரை நடுங்க வைக்கும் சண்டைக் காட்சிக்காக பயிற்சி பெற்றதாக வீடியோக்கள் வெளியாகின.
டூப் போடாத டாம் க்ரூஸ்: ஸ்டன்ட் மேனாக சினிமாவில் அறிமுகமான டாம் க்ரூஸ் 60 வயதை கடந்த நிலையிலும் இதுவரை எந்தவொரு படத்துக்கும் டூப் போடாமல் நடித்து வருகிறார் என்றே கூறப்பட்டு வருகிறது.
அசாத்யமான சாகச காட்சிகளை கூட சாத்தியப்படுத்தி நடித்து திரையில் மிரட்டி வருகிறார் நடிகர் டாம் க்ரூஸ். இந்நிலையில், இத்தனை ஆண்டுகள் இல்லாமல் திடீரென ரசிகர்களை ஷாக் ஆக்கும் படியாக இப்படியொரு டூப்களுடன் டாம் க்ரூஸ் இருக்கும் ஸ்டில் ஒன்று டிரெண்டாகி வருகிறது.
டாம் க்ரூஸ்க்கு டூப்பா: நடிகர் டாம் க்ரூஸ் இரு பாடி டபுள் நடிகர்களுடன் நிற்கும் போட்டோ ஒன்று வெளியாகி உலகளவில் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அந்த இருவரும் டூப் போட்டுத் தான் டாம் க்ரூஸ் படங்களில் ரிஸ்க் காட்சிகளில் நடித்து வருகிறாரா? உண்மையிலேயே டாம் க்ரூஸ் ஸ்டன்ட் செய்யவில்லையா என விமர்சனங்களும் ட்ரோல்களும் அந்த ஒரே ஒரு போட்டோவை வைத்து கிளம்பி உள்ளன.
ஏஐ பார்த்த வேலை: ஆனால், தற்போது டாம் க்ரூஸின் டூப்புகள் என அந்த போட்டோவில் இருப்பவர்களின் முகங்கள் அப்படியே அச்சு அசல் டாம் க்ரூஸை போலவே இருப்பது தான் அந்த போட்டோவுக்கே தற்போது பங்கமாக அமைந்து விட்டது.
அது எப்படி திமிங்கலம் டூப் நடிகரும் டாம் க்ரூஸ் மாதிரியே இருப்பார் என ஆராய்ந்த நெட்டிசன்களுக்கு இது முழுக்க முழுக்க ஏஐ பார்த்த வேலை என்பது புரிந்துள்ளது. டிரெஸ் அணிந்திருக்கும் ஹீரோயின்களை நிர்வாணமாக காட்டுவது, ஹாலிவுட் நடிகைகளை காவி உடை அணிந்த சாமியார்களாக காட்டுவது என ஏஐ தொழில்நுட்பம் எல்லை மீறி சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், அதன் மூலம் உருவாக்கப்பட்ட பாடி டபுள் தான் அந்த இருவரும் என்றும் அந்த போட்டோ உண்மையில்லை என்றும் கூறுகின்றனர்.