சென்னை: பொன்னியின் செல்வனை தொடர்ந்து தங்கலான் படத்தில் நடித்து வந்தார் சீயான் விக்ரம்.
பா ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேஜிஎஃப் பகுதிகளில் நடைபெற்றது.
தங்கலான் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய விக்ரம், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஓய்வில் இருந்து வந்தார்.
இந்நிலையில், விபத்தில் இருந்து மீண்டு வந்துள்ள விக்ரம், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார்.
விக்ரம் லேட்டஸ்ட் கிளிக்ஸ்:பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாக மிரட்டிய விக்ரம் நடிப்பை அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். முக்கியமாக பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் விக்ரம் நடிப்புக்கு ரசிகர்களிடம் அதிக பாராட்டுகள் கிடைத்தன. இதனால் உற்சாகமான விக்ரம் அதே வைபில் தங்கலான் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
முதன்முறையாக பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதால், தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே தாறுமாறாக உள்ளது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை ஆஸ்கர் உட்பட சர்வதேச விருதுகளுக்கு அனுப்ப வேண்டும் என பா ரஞ்சித் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பு கேஜிஎஃப் பகுதிகளில் நடைபெற்று வந்தது.
இந்தப் படத்திற்காக ரொம்பவே வித்தியாசமான லுக்கில் விக்ரம் மாறியது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது. இந்நிலையில், தங்கலான் படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் விக்ரமின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட விக்ரம் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறியிருந்தனர்.
இதனால், தங்கலான் படப்பிடிப்பில் தாமதமானதோடு விக்ரம் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். இந்நிலையில், ரெஸ்ட் மோடில் இருந்து திரும்பிய விக்ரம், தனது சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார். ஒயிட் டீஷர், தலையில் மங்கி கேப் அணிந்துகொண்டு செம்ம ஸ்டைலாக நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்களில் விக்ரமின் கையில் எந்த கட்டும் இல்லாததால் அவர் விரைவில் தங்கலான் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த வாரமே தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் ஓய்வில் இருந்ததால் சார்பட்டா பரம்பரை 2ம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருந்தார் பா ரஞ்சித். இப்போது அவரும் தங்கலான் படப்பிடிப்புக்கு ரெடியாகிவிட்டாராம்.