ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க் ஆனது தங்க நிறத்தில் அமைந்துள்ளதை டீசர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
160cc சந்தையில் உள்ள பல்சர் NS160, அப்பாச்சி RTR 160 4V, யமஹா FZS-FI போன்ற பைக்குகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மிகவும் பிரீமியம் வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது.
2023 Hero Xtreme 160R 4V
தற்பொழுது விற்பனையில் உள்ள 2 வால்வுகளை பெற்ற பட்ஜெட் விலை எக்ஸ்ட்ரீம் 160ஆர் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது. ஏற்கனவே புதிய நிறங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
முற்றிலும் புதிய 4 வால்வுகளை பெற உள்ள 163cc ஏர் மற்றும் ஆயில் கூலர் பெற்ற என்ஜின் ஆனது 160ஆர் பைக்கை விட கூடுதல் பவர் மற்றும் டார்க் வழங்கலாம். எனவே நெடுஞ்சாலை பயணத்திற்கு மிகவும் ஏற்றதாக அமைந்திருக்கும்.
விற்பனையில் கிடைத்து வந்த மாடலில் இடம்பெற்றிருந்த டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனுக்கு மாற்றாக கோல்டன் நிறத்தை பெற்ற யூஎஸ்டி ஃபோர்க் கொண்டு வந்துள்ளது. எல்இடி ஹெட்லைட் புதுப்பிக்கப்பட்டு, டேங்க் எக்ஸ்டென்ஷன் நீட்டிக்கப்பட்டிருக்கலாம். என்ஜின் கவுல் பேனலில் 4வி என எழுதப்பட்டுள்ளது.
விற்பனையில் உள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R விலை ரூ. 1.18 லட்சம் முதல் ரூ.1.30 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், தமிழ்நாடு). இந்த மாடலை விட புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160R 4வி அறிமுகப்படுத்தப்பட்டவுடன் சுமார் ரூ.8,000-10,000 வரை விலை உயரக்கூடும்.