சென்னை : சீரியல் நடிகை ரீஹானா அட்ஜஸ்ட்மெண்ட் சினிமாவில் மட்டும் தான் இருக்கா? என்று கோபத்தில் செய்தியாளரிடம் கத்திப்பேசினார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்தராகம் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார் ரீஹானா. இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும், அதிரடி கருத்துக்களை துணிந்து பேசக்கூடியவர்.
சமீபத்தில் இவர் நிர்வாண வீடியோவை அனுப்பச் சொல்லி தொந்தரவு செய்கிறார்கள் என்று அதிரடியான புயலை கிளப்பி இருந்தார்.
நடிகை ரீஹானா : இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகை ரீஹானா, அட்ஜஸ்ட்மெண்ட் சினிமா, மீடியாவில் மட்டும் தான் இருக்கா. அட்ஜஸ்ட்மெண்ட் எல்லா இடத்திலும் இருக்கு. நான் இதற்கு முன் ஒரு மருத்துவமனையில் வேலைப்பார்த்துக்கொண்டு இருந்தேன் அப்போது, ஒரு மருத்துவர் எனக்கு நூல் விட்டுபார்த்தார் நான் மடிகிறேனா என்று.
எல்லா இடத்திலும் அட்ஜஸ்ட்மெண்ட்: ஆனால், அங்கு இருக்கும் ஒரு நர்ஸ் வேறுவழியில்லாமல் அட்ஜஸ்ட்மெண்டுக்கு ஒத்துப்போனார். இப்படி மருத்துவமனை, ஐடி, எக்ஸ்போர்ட் என அனைத்து இடத்திலும் அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கு. ஆனால் அது எல்லாம் பெரிய விஷயமாக பேசப்படவில்லை. ஆனால், மீடியா, சினிமா என்றால் அனைத்து ஊடகங்களும் ரவுண்டு கட்டி பேசுகிறார்கள் என்று நடிகை ரீஹானா பேட்டியில் கூறியிருந்தார்.
விஷ்ணுகாந்த்திற்கு ஆதரவு : இதே பேட்டியில் தான் நடிகை ரீஹானா, விஷ்ணுகாந்த், சீரியல் நடிகை சம்யுக்தா விவாகரத்தில் யாருமே கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில், முதல் ஆளாக வந்து விஷ்ணுகாந்துக்கு ஆதரவு தெரிவித்தார். அவருடன் நான் பணியாற்றி இருக்கிறேன் அவரை பற்றி எனக்கு முழுசாக தெரியாது என்றாலும் ஓரளவுக்கு அவர் பற்றி தெரியும் என்றார்.
கடுமையாக விமர்சித்தார் : மேலும், குடும்ப சண்டையை மீடியாவிற்கு முன் கொண்டு வந்து கணவர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்று அப்பா, அம்மா முன் பேச தயங்கும் விஷயத்தை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பார்ப்பவர்களின் முகம் சுளிக்கும் வகையில் பேசி இருக்கிறார். இதற்குமுன் ஹரி , ரவி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்று கூறி ப்ரேக்கப் செய்த சம்யுக்தா, இப்போது விஷ்ணுகாந்த் மீது பாலியல் ரீதியாக புகார் கூறியுள்ளார் என்று நடிகை சம்யுக்தாவை கடுமையாக விமர்சித்து இருந்தார்.