மும்பை : பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகளின் ஓவர் கவர்ச்சி புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் முகம் சுளித்தனர்.
பாலிவுட் பாட்ஷா என ரசிகர்கள் ஷாருக்கானை செல்லமாக அழைத்து வருகின்றனர் இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நடிகர் ஷாருக்கான் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். அண்மையில் இவரது நடிப்பில் பதான் திரைப்படம் வெளியாகி சக்கைபோடு போட்டது.
சுஹானா கான் : நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் விரைவில் ஆர்ச்சிஸ் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் பேரன் அக்ஸ்த்யா நந்தா, போனி கபூரின் மற்றொரு மகளான குஷி கபூர் என அடுத்த தலைமுறை வாரிசு நடிகர், நடிகைகள் சினிமாவில் அறிமுகமாக உள்ளனர்.
ஆர்ச்சிஸ் திரைப்படம் : மேலும் புதுமுகங்கள் வேதாந்தா ரெய்னா, மிஹிர் அஹூஜா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 1960களில் நடக்கும் ம்யூசிக்கல் படமாக உருவாகும் இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. கல்லி பாய் உள்ளிட்ட படங்களை எடுத்த பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஜோயா அக்தர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். பிரபல ஆங்கில காமிக்ஸான ஆர்ச்சிஸைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

முழுவீச்சில் தயார் : இதையடுத்து ஷாருக்கானின் மகள் சுஹானா கான் முழு வீச்சில் இந்தப் படத்துக்காகவும் தன்னுடைய பாலிவுட் எண்ட்ரிக்காக தயாராகி வருகிறார். அதன்படி, நடனம் கற்றுக்கொண்டு வருகிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்க தீவிர உடற்பயிற்சியிலும் செய்து வருகிறார்.
அப்பா பெயரை கெடுக்காதீங்க : இந்நிலையில், இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் சுஹானா கான், படு கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் லைக்குகளை குவிந்து வந்தாலும், ஷாருக்கானின் தீவிர ரசிகர்கள் அப்பா பெயரை கெடுக்காதீங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.