இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
கடந்த ஒரு வருட காலமாக ரஜினியின் அடுத்தடுத்த படங்களை பற்றிய அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடந்த சில மாதங்களாக ரஜினியின் படத்தை பற்றி வாரம் ஒரு தகவலாவது வெளியாகி வருகின்றது. அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினி படங்களில் நடிப்பது சந்தேகமே என பலர் விமர்சித்து வந்தனர்.
அதற்கு ஏற்றாற்போல ரஜினி தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார். எனவே பலர் ரஜினி இனி படங்களில் நடிக்கமாட்டார் என முடிவு செய்து விட்டனர். அந்த சமயத்தில் தான் இளம் இயக்குனரான நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினி.
அதன் பிறகு ஒருபக்கம் ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் போது லால் சலாம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதுவும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிப்பது பலரும் ஆச்சர்யமான விஷயமாக இருக்கின்றது. இதைத்தொடர்ந்து ஜெயிலர் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினி ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார்.
மீண்டும் இணையும் கூட்டணி
இதைத்தவிர தலைவர் 171 படத்திற்காக ரஜினி லோகேஷ் கனகராஜுடனும் இணையவுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த பட அறிவிப்புகளால் தன் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகின்றார் ரஜினி. இந்நிலையில் சமீபத்தில் வந்த ஒரு தகவல் தான் இணையத்தில் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. அதாவது தலைவர் 170 திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சனும் நடிக்க இருக்கிறாராம்.
Leo: லியோ படத்தில் இணைந்த பிரபல நடிகை ? லிஸ்ட் போய்கிட்டே இருக்கே..!
இந்த தகவல் கடந்த இரண்டு நாட்களாக தீயாய் பரவி வருகின்றது. ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் இதற்கு முன்பே ஒரு படத்தில் இணைந்து நடித்திருந்தாலும் 32 வருடங்கள் கழித்து மீண்டும் தலைவர் 170 மூலம் இணையவுள்ளனர். இந்நிலையில் ரஜினி தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க என்ன காரணம் என்பது பற்றி ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது ஒருபக்கம் விஜய், அஜித்,
கமல்
ஆகியோரின் படங்களின் வியாபாரங்கள் அமோகமாக இருந்து வருகின்றன. படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் ரைட்ஸ் அனைத்தும் பல கோடிக்கு வியாபாரம் ஆகிவருகின்றது. குறிப்பாக விஜய்யின் லியோ, கமலின் இந்தியன் 2ஆகிய படங்கள் வியாபாரத்தில் சாதனை படைத்து வருகின்றது.
ரஜினியின் மாஸ்டர் பிளான்
அதற்கு முக்கிய காரணம் விஜய் மற்றும் கமலாக இருந்தாலும் அதில் நடிக்கும் மற்ற நடிகர்களும் ஒரு காரணம் தான் என சொல்லப்படுகின்றது. லியோ மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் ஒரு மல்டி ஸ்டாரர் படங்களாகும். எனவே பல மொழி நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதால் அனைத்து மொழிகளிலும் படத்தை போட்டிபோட்டு வாங்குவார்கள்.
எனவே படத்தின் வியாபாரம் பலமடங்கு உயரும். இந்நிலையில் இதை உணர்ந்த ரஜினி ஜெயிலர் படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார் என பழமொழி நடிகர்களை நடிக்க வைத்துள்ளார். அதே போல தலைவர் 170 படத்திலும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனை ரஜினி நடிக்க வைக்க இருப்பதாக தகவல் வருகின்றது.
அமிதாப் பச்சன் நடிக்கின்றார் என்றால் பாலிவுட்டில் தலைவர் 170 படத்தின் வியாபாரம் அமோகமாக இருக்கும். எனவே தான் ரஜினி தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைப்பதாக ஒரு சிலர் பேசி வருகின்றனர். இதைப்போல ரஜினி லோகேஷ் கனகராஜுடன் இணையும் தலைவர் 171 திரைப்படமும் ஒரு மல்டி ஸ்டாரர் படமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.