அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பிபர்ஜோய், குஜராத்தின் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே வரும் 15ம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் அந்த புயல் மையம் கொண்டுள்ளதாகவும், சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென கணிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்பகுதியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரை குஜராத் அரசு நிலை நிறுத்தியுள்ளது.
மும்பை கடற்பகுதியிலும் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.