பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் இன்று முதல் அமலாகிறது. கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், 10 கிலோ ரேஷன் அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு தலா மாதம் ரூ.3 ஆயிரம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு தலா ரூ.1,500, பெண்களுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் ஆகிய 5 இலவசத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது. […]
