ஜி 20 அமைச்சர்கள் மாநாடு வாரணாசியில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் வாரணாசிக்கு வந்துள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளார்.
உலகில் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை, கடன் நெருக்கடிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, வறுமை விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத சூழல் போன்ற பல்வேறு சவால்களும் பிரச்சினைகளும் தலைதூக்கியுள்ள நிலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.