சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர் வரை மட்டுமே இயக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேசின்பிரிட்ஜ் அருகே ரயில் மேம்பாலம் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சென்னை சென்ட்ரலுக்கு செல்ல வேண்டிய சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு – சென்னை சென்ட்ரல் ஏற்காடு விரைவு ரயில், வரும் 11, 13ம் தேதிகளில் பெரம்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். கேரளா மாநிலம் பாலக்காடு […]