கடலூர் அருகே தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து பயணிகளுடன் கும்பகோணம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் விருதாச்சலம் நோக்கி சென்ற தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இந்த விபத்தால் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், அரசு பேருந்தின் ஸ்டியரிங் ராடு கட்டானதால் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து சேத்தியாதோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.