திண்டிவனம் அருகே கோயில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின் போது வழி விடுவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
பழமுக்கல் பகுதியில் உள்ள ஸ்ரீ ஆயியம்மன் ஆலய கூழ் வார்த்தல் திருவிழாவையொட்டி, முக்கிய வீதிகள் வழியாக நேற்று அம்மனை ஊர்வலமாக கிராம மக்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.
அப்போது (நல்லாளம் கிராமத்தை சேர்ந்த) இளைஞர் ஒருவர் ஊர்வலம் சென்ற இளைஞர்களிடம் வழி விடுமாறு கூறியதாகவும், இதனையடுத்து அவரை இளைஞர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து தனது நண்பர்களுடன் சென்ற தாக்கப்பட்ட நபருக்கும், கிராம இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இருதரப்பினரும் அருகிலிருந்த தடி, கட்டைகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட நிலையில், இம்மோதல் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.