பட்டுக்கோட்டை அடுத்த திட்டக்குடி கிராமத்தில் காலாவதியான ரசீதுகளை பயன்படுத்தி மண் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை எம்.எல்.ஏவின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தாம் கூறியதுபடியே டி.எஸ்.பி பாலாஜி கைது செய்தார்.
திட்டக்குடி மற்றும் கரம்பயம் குளங்களில் விதிமுறைகளை மீறி ஆழமாக மண் அள்ளிக்கொண்டிருந்த கும்பலையும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அப்போது டி.எஸ்.பி பாலாஜியை தொடர்புகொண்ட பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை, நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தங்களது ஆட்களை விடுவிக்க வேண்டும் என மிரட்டும் தொணியில் பேசினார். அதற்கு மசியாத டி.எஸ்.பி, வழக்கு பதிவு செய்வதாகவும், ஆனதைப் பாருங்கள் என்றும் தைரியமாகக் கூறினார்.
டி.எஸ்.பி தாம் சொன்னதைப் போலவே, மண் திருட்டில் ஈடுபட்ட அண்ணாதுரையின் ஆதரவாளர்களாக கூறப்படும் ஸ்ரீதர், குமார், மாதரசன், கலையரசன் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.