டோக்கியோ:
ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் சுனாமி தாக்கக்கூடும் என்ற பீதியில் மக்கள் உறைந்துள்ளனர்.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு ஜப்பான். ஜப்பான் அமைந்திருக்கும் பூளோக ரீதியாக அந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ஜப்பானில் மிகச்சிறிய நில அதிர்வுகள் பதிவாகிக் கொண்டே இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அதனால் ஜப்பானை பொறுத்தவரை வீடுகள், சாலைகள், கட்டிடங்கள், மேம்பாலங்கள் என அனைத்தும் நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமல்லாமல், நிலநடுக்கம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு அங்குள்ள அனைவருக்குமே உண்டு.
இந்நிலையில், ஜப்பானில் இன்று மாலை 6.18 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக இது பதிவாகியுள்ளதால் இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது. ஜப்பான் முழுவதுமே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என ஜப்பான் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேனா சிலையை உடைக்கும் தேதியை விரைவில் அறிவிப்பேன்.. சீமான் பரபரப்பு பேட்டி
இதனிடையே, கடந்த 2011-ம் ஆண்டு இதுபோன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர்தான் மிகப்பெரிய சுனாமி ஜப்பானை தாக்கியது. ஆகவே, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதும் ஜப்பான் மக்களுக்கு சுனாமி அச்சம் ஏற்பட்டது. இருந்தபோதிலும், சுனாமி எச்சரிக்கை எதும் அங்கு விடுக்கப்படவில்லை.