ஜி.எஸ்.டி சாலையில் டபுள் டமாக்கா… கிளாம்பாக்கம் ரெடியானதும் CMDA பலே ஐடியா!

சென்னையின் புதிய பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் (கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்) உருவெடுத்துள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அடுத்த சில மாதங்களில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கோயம்பேட்டிற்கு குட்பைஇதனால் இனி தென் மாவட்ட பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டியதில்லை. அதேசமயம் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்று திரும்பும் வாகனங்கள் அதிகரிக்கும். இதன் காரணமாக ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஏற்கனவே ஒவ்வொரு நாளும் ஜி.எஸ்.டி சாலையில் நெருக்கடியான சூழல் காணப்படுகிறது.
​கிளாம்பாக்கம் ஓபனிங்எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை மாநகருக்குள் நுழையவும், வெளியேறவும் என இரண்டு மாற்று வழித்தடங்களை கையிலெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வேலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA), நெடுஞ்சாலைத் துறை, காவல்துறை ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.
புதிதாக இரண்டு வழித்தடங்கள்இந்நிலையில் சி.எம்.டி.ஏ அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடந்த கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மற்றும் தாம்பரம் போலீசார் கலந்து கொண்டனர். இதில் புதிய வழித்தடங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் பேசிய அமைச்சர் சேகர் பாபு, மொத்தம் 5 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 2 வழித்தடங்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்று திரும்பலாம்.சி.எம்.டி.ஏ நடவடிக்கைமேலும் நகருக்குள் சென்று திரும்பவும் பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்க்கலாம் எனக் குறிப்பிட்டார். இதுதொடர்பாக சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை – போலீஸ் அகாடமி – நல்லம்பாக்கம் சாலை வழியாக ஊரப்பாக்கத்தில் சென்றடையலாம். இதன் மொத்த தூரம் 5.33 கிலோமீட்டர் ஆகும்.
ஜி.எஸ்.டி சாலை விரிவாக்கம்சென்னை நகருக்குள் நுழையும் வாகனங்கள் கூடுவாஞ்சேரி – மாதம்பாக்கம் சாலை, ஆதனூர் நெடுஞ்சாலை – யூனியன் சாலை – வண்டலூர் – வாலாஜா சாலை வழியாக செல்லலாம். இதன் மொத்த தூரம் 10.80 கிலோமீட்டர் ஆகும். முன்னதாக பல்லாவரத்தில் சாந்தை சாலை டூ குன்றத்தூர் சாலையில் இடையிலான மேம்பாலத்திற்கு கீழ் ஜி.எஸ்.டி சாலையை விரிவாக்கம் செய்வது தொடர்பான பணிகளில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது.
நெருக்கடி குறையும்நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வரும் சூழலில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலை பயன்பாட்டிற்கு வந்தால் கிண்டியில் இருந்து தாம்பரம் வரை சற்றே போக்குவரத்து நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.