தனியா வா.. நம்பி வந்த காதலியை துண்டு துண்டாக வெட்டிய காதலன்! அடுத்து நடந்த பகீர் சம்பவம்


தமிழகத்தில் தன்னிடம் 2 மாதங்களாக பேசாமல் இருந்த காதலியை காதலன் வெட்டிக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வெர்ஜின் ஜோஸ்வா என்பவர் தனது கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்து வந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். 

இருவரும் தனது இளங்கலை படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்கள். அந்த மாணவி மேலும் படிக்க வேண்டும் என்று பி.எட் படிக்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில் திடீரென அந்த மாணவி, வெர்ஜின் ஜோஸ்வாவுடனான காதலை முறித்துக்கொண்டதுடன் 2 மாதங்களாக பேசாமல் இருந்துள்ளார்.

மேலும் தான் கொடுத்த கணனியை திருப்பி தருமாறு கேட்டுள்ளார், அதை கொடுப்பதற்காக சென்ற வெர்ஜின் ஜோஸ்வா உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று தனியாக அழைத்து சென்றுள்ளார்.

தனியா வா.. நம்பி வந்த காதலியை துண்டு துண்டாக வெட்டிய காதலன்! அடுத்து நடந்த பகீர் சம்பவம் | Boyfriend Killed His Girlfriend In Kanya Kumari

அவரை நம்பி அந்த பெண்ணும் செல்ல, உதயனூர்குளம் சாலையில் சென்றபோது திடீரென பைக்கை நிறுத்திவிட்டு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அந்த மாணவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
  

மயங்கி விழுந்த மாணவி இறந்து விட்டதாக நினைத்து வெர்ஜின் ஜோஸ்வா சென்றுள்ளார்.

அங்கு வீதியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

இதற்கிடையே காதலியை வெட்டிவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் வெர்ஜின் ஜோஸ்வா.

இந்த இந்தக் கோர சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தனியா வா.. நம்பி வந்த காதலியை துண்டு துண்டாக வெட்டிய காதலன்! அடுத்து நடந்த பகீர் சம்பவம் | Boyfriend Killed His Girlfriend In Kanya Kumari



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.