கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே அரசுப் பேருந்தின் ஸ்டியரிங் ராடு திடீரென உடைந்ததால், எதிரே வந்த தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற தனியார் பேருந்தும், கும்பகோணம் நோக்கி வந்த அரசுப் பேருந்தும் சேத்தியாத்தோப்பு அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
அரசுப் பேருந்தின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதில் ஓட்டுநருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 9 பேர் லேசான காயமுற்றனர்.
அரசுப் பேருந்தின் ஸ்டியரிங் ராடு திடீரென உடைந்ததால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.