ஏழுமலையான் தரிசனம் என்றாலே கோவிந்தா… கோவிந்தா… என்ற பக்தி பரவசமூட்டும் கோஷம் தான் நினைவில் தோன்றும். உலகின் பணக்கார கடவுள்களில் ஒன்றாக பார்க்கப்படும் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி செல்வோர் தான் அதிகம். அதேசமயம் நாட்டின் பிற பகுதிகளில் திருமலையில் இருப்பது போன்ற கோயிலை கட்டி எழுப்பி தேவஸ்தானம் (TTD) சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருப்பதி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைவெறும் ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் மட்டுமின்றி சமூக நலனிற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்கது மருத்துவ சேவை. திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (SVIMS) என்ற பெயரில் பிரம்மாண்ட மருத்துவமனையை செயல்படுத்தி வருகிறது.சிறப்பு மருத்துவ சேவைகுறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இதற்காக குறைந்த கட்டணம், இலவச சிகிச்சைகள், சிறப்பு கண்காணிப்பு எனப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதுவும் மிகவும் அத்தியாவசியமான மருந்துகள் பலவும் மலிவு விலையில் கிடைப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
தர்மா ரெட்டி நேரில் ஆய்வுஇந்த மருத்துவமனையில் திருப்பதி தேவஸ்தானத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இதன் செயல்பாடுகள் சிறப்பானதாக இருக்கிறது என்று பிரதமர் மோடியே ஒருமுறை பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேவஸ்தான செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி, இணை செயல் அதிகாரி சதா பார்கவி, SVIMS மருத்துவமனை இயக்குநர் வெங்கம்மா உள்ளிட்டோர் சமீபத்தில் நேரில் சென்று பார்வையிட்டனர்.
டயாலசிஸ் பேக்ஸ் பற்றாக்குறைஅப்போது நோயாளிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். தற்போதைய சூழலில் டயாலசிஸ் பேக்ஸ் போதிய அளவில் இல்லை எனக் கூறப்பட்டது. இதற்கு அடுத்த சில நாட்களில் விரைவாக தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இந்த சூழலில் நரம்பியல் துறைக்கு சென்ற ஏ.வி.தர்மா ரெட்டி, டெலி மெடிசன் என்ற புதிய சேவை தொடங்கி வைக்கப்படுவதாக அறிவித்தார்.
டெலி மெடிசன் சேவைஅதாவது, ஆன்லைன் மூலம் மருத்துவர்களின் ஆலோசனையை பெறலாம். சிறுநீரக நோயாளிகள் மருந்துகள் பெற முடியும். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவித்தொகை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஸ்பெஷல் சாப்ட்வேர் ரெடியாகிறதுபின்னர் அதிகாரிகளிடம் பேசிய தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி, SVIMS மருத்துவமனையின் நிர்வாக செயல்பாடுகள், பொறியியல் பணிகள் ஆகியவை அனைத்தும் சிறப்பு மென்பொருள் மூலம் இணைக்கப்பட வேண்டும். இது மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விடுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து சிறுநீரக துறையின் செயல்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்தது கவனிக்கத்தக்கது.