நடிகர் திலகம் அவதாரம் எடுக்கும் டொவினோ தாமஸ்!
மலையாள நடிகர் டொவினோ தாமஸ் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். தற்போது அவர் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரைவிங் லைசென்ஸ் படத்தின் இயக்குனர் லால்.ஜெ.ஆர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் இந்த படத்திற்கு நடிகர் திலகம் என்று தலைப்பு வைத்துள்ளனர். சவுபின் சாகிர், பாவனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.