பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 8 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள 4 மாவட்டங்களில் சனிக்கிழமையன்று அதி கனமழை பெய்தது. இதில் பல வீடுகள் இடிந்து சேதமடைந்ததில், 25 பேர் பலியானதோடு, 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அரபிக்கடல் பகுதியில் இருந்து “பிபர்ஜாய் புயல்” நெருங்கி வருவதால், நாட்டின் தெற்கு பகுதிகளில் அவசரகால நடவடிக்கைகளை துரிதப்படுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.