
புது கார் வாங்கிய சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீ!
சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பிரமாதமாக பாடல்கள் பாடி அசத்தியவர் நித்ய ஸ்ரீ. சினிமாவில் நடிகையாகவும், பின்னணி பாடகராகவும் என்ட்ரி கொடுத்துள்ள அவர், மேடை கச்சேரிகளிலும் உள்நாடு வெளிநாடு என படு பிசியாக வலம் வருகிறார். அவர் தற்போது தனது சொந்த உழைப்பில் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நித்ய ஸ்ரீக்கு நண்பர்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.