சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 20-வது ஆசிய யு-20 தடகள போட்டிகளில் 6 தங்கப்பதக்கம் உட்பட 19 பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு எனது வாழ்த்து.
இந்த நேரத்தில், பள்ளி குழந்தைகளுக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இழந்ததன் மூலம், தமிழக அரசால் கொன்று புதைக்கப்பட்ட கனவு மற்றும் ஆசையை கொண்டிருந்த தமிழகத்தின் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை நோக்கி எனது இதயம் செல்கிறது.
புதிய மொழியைப் படிப்பதில் தடையாக இருப்பது முதல் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் உரிமையை மறுப்பதுவரை தமிழகத்தின் லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மாணவர்களின் குரலை தமிழக அரசு ஒடுக்குகிறது. தமிழக மக்கள் மீதான அலட்சிய போக்குக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.