மீஞ்சூர் அருகே பள்ளி வளாகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே இருளர் காலனி பகுதியில் வசிப்பவர் முத்து. இவரது மகன் மணிகண்டன் (19). இவர் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்து வெளியே சென்ற மணிகண்டன், அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.