புதுடெல்லி,
மத்தியில் பாஜக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போது இருந்தே தேசிய அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு முன்னர் 2014ஆம் ஆண்டு வரை இந்தியாய்வின் மொத்த கடனனானது 50 லட்சம் கோடியாக இருந்தது என காங்கிரஸ் கட்சி கூறியது. ஆனால் தற்போது இந்தியாவின் மொத்த கடன் 155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் தான் இந்தியாவின் கடன் 100 லட்சம் கோடி அதிகரித்துள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறுகையில்,
2014-ல் ரூ 55 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் கடன் தற்போது ரூ.155 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி அரசின் கீழ் ரூ.100 லட்சம் கோடி கடன் சேர்ந்துள்ளது. குஜராத் முதல்-மந்திரியாக இருந்த மோடி, அரசியல் அரங்கின் மறுமுனையில் இருந்தவர்களை ஆற்றல் இல்லாதவர்கள், திறமையற்றவர்கள், ஊழல்வாதிகள் என்றெல்லாம் குற்றம் சாட்டினர். அந்த வார்த்தைகள் இன்றைக்கு வேறு யாரையும் விட அவருக்கு சரியாக பொருந்தும் என்றார்.