பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்தாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகபட்சமாக சனிக்கிழமை 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தகிக்கும் வெப்பத்தை தாங்க முடியாமல், மேற்கு லண்டனிலுள்ள ஹாமர்ஸ்மித் நகர மக்கள், தேம்ஸ் நதிக்கரையோரம் தஞ்சமடைந்தனர். தேம்ஸ் நதிக்கரையோரம் ஓய்வெடுப்பதோடு, படகுகளில் சென்றும் அவர்கள் பொழுதை போக்கினர்.