மும்பை : மும்பையின் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ரூ. 50 கோடி மதிப்பிலான 20 கிலோ மெபெட்ரான் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.போதைபொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ரூ. 1 கோடியே 10 லட்சம், 187 கிராம் எடையிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தது யார், அவர்கள் யாருக்கு விற்பனை செய்ய முயன்றார்கள், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement