வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கர்நாடகாவில்
காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டாலும்,
உள்ளுக்குள் பல பிரச்னைகள் குடைச்சல் தந்து வருகின்றன. மாநில முதல்வர்
சித்தராமையாவிற்கும், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கும் அறவே
ஆகாது.
சிவகுமாரைத் தான் முதல்வராக்க வேண்டும் என கார்கே
ஆசைப்பட்டார். ஆனால், காங்., முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும்
கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா, சித்தராமையாவிற்கு ஆதரவு
தெரிவித்துவிட்டனர். இதனால், சிவகுமார் துணை முதல்வராகிவிட்டார்.
துணை
முதல்வர் என்பதற்கு பதிலாக, கூடுதல் முதல்வர் என பதவியின் பெயரை
மாற்றிவிடலாம் என்றும் சிவகுமாருக்கு ஆதரவாக கார்கே பேசிப் பார்த்தார்.
ஆனால், இதை சில சட்ட வல்லுனர்களும், மேலிடமும் ஒத்துக்கொள்ளவில்லை.
இதற்கிடையே,
கட்சி மேலிடம் மீது சித்தராமையா கோபத்தில் உள்ளார். காரணம், சட்டசபை
தேர்தல் சமயத்தில் நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை மூத்த
தலைவர்கள் அறிவித்தது தான்.
கர்நாடக பட்ஜெட்டை ஒன்பது முறை தாக்கல்
செய்தவர் சித்தராமையா. இதனால், அவருக்கு மாநிலத்தின் நிதி நிலை பற்றி
அவருக்கு நன்கு தெரியும். இந்நிலையில், இந்த தேர்தல் வாக்குறுதிகளை
நிறைவேற்ற, அவர் பல நிபந்தனைகளை விதித்துள்ளார்.
கஜானாவையே காலி
செய்யும் இந்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, அது அறிவிக்கப்படும் வரை
சித்தராமையாவிற்கு தெரியாதாம். பிரியங்கா இவற்றை பிரசார கூட்டத்தில்
அறிவித்த போது அதிர்ச்சியடைந்தாராம் சித்தராமையா. இதைப் பற்றி, கட்சி
மேலிடம் எங்கள் தலைவரிடம் விவாதித்திருக்கலாம் என பொருமுகின்றனர்
சித்தராமையாவின் ஆதரவாளர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement