மும்பை: கண்டிபாத் உள்ளிட்ட ஆல்ட் பாலாஜி ஓடிடியில் வெளியான பல கில்மா படங்களில் படு ஆபாசமாக நிர்வாண கோலத்தில் நடித்துள்ள நடிகை கெஹனா வசிஸ்த் இஸ்லாமிய மதத்துக்கு மாறி திருமணம் செய்துள்ளார்.
ஃபில்மி துனியா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கெஹனா வசிஸ்த். இன்ஸ்டாகிராமில் உள்ளாடைகளை அணிந்து கொண்டும் டாப்லெஸ் ஆகவும் படு ஆபாசமாக ஏகப்பட்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இணையத்தை சூடாக்கியவர் கெஹனா வசிஸ்த்.
சமீபத்தில், இஸ்லாமியரான ஃபைஸன் அன்சாரி என்பவரை காதலிக்கத் தொடங்கிய கெஹனா காதலுக்காக இஸ்லாமிய மதத்துக்கு மாறி திருமணம் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
எரோடிகா வெப்சீரிஸ் நடிகை: கவர்ச்சியை தாண்டி டாப்லெஸ் ஆகவும் முழு நிர்வாணமாகவும் எரோடிகா வெப்சீரிஸ்களில் நடித்து வந்தவர் நடிகை கெஹனா வசிஸ்த். பலான படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் ஓடிடி தளமான ஆல்ட் பாலாஜியில் ஏகப்பட்ட மினி வெப்சீரிஸ்களில் நடித்து வந்தார்.
கண்டிபாத் வெப்சீரிஸில் கெஹனா வசிஸ்த் நடித்த நிலையில், ஏகப்பட்ட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அந்தளவுக்கு கவர்ச்சியை மீறிய ஆபாசக் காட்சிகளை நடித்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார் கெஹனா வசிஸ்த்.
மதம் மாறி திருமணம்: இந்து பெண்ணான கெஹனா வசிஸ்த் தனது முஸ்லீம் காதலரை திருமணம் செய்து கொள்வதற்காக மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
34 வயதான கெஹனா வசிஸ்த் தனது காதலர் ஃபைஸன் அன்சாரியை இஸ்லாமிய மத முறைப்படி திருமணம் செய்துக் கொண்டுள்ள நிலையில், அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
கெஹனா வசிஸ்த்துக்கும் அவரது கணவருக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
ஷில்பா ஷெட்டி கணவருடன் நெருக்கம்: முன்னதாக நடிகை கெஹனா வசிஸ்த் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுடன் நெருக்கமாக பழகி வந்தார். அவருடன் இணைந்து ஆபாச படங்களில் நடித்து வந்த நிலையில், ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் சிக்கிய போது இவருக்கும் ராஜ் குந்த்ராவுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், அடுத்ததாக காதலித்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர் மற்றும் அமேசான் மினி டிவியில் வெளியான டேட் பாஸியின் நடிகரான ஃபைஸனைத் தான் தற்போது கெஹனா வசிஸ்த் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.