ராய்ப்பூர் : சத்தீஸ்கரில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 89 மாணவர்கள், அம்மாநில அரசு சார்பில் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பயணம்
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு சார்பில் ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில், 125 மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற 89 மாணவர்கள், ராய்ப்பூரில் இருந்து ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
திட்டம்
‘இளம் தலைமுறையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என, அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement