Ileana:கண்ணீரை துடைக்கிறார், சிரிக்க வைக்கிறார்: காதலரின் போட்டோவை வெளியிட்ட கர்ப்பிணி இலியானா

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Ileana Dcruz instagram post: நடிகை இலியானா தன் காதலரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பிரபலங்கள் இலியானாவை வாழ்த்தியுள்ளனர்.

​இலியானா​தெலுங்கு திரையுலகில் ஒரு பெரிய ரவுண்டு வந்த இலியானா பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டார் இலியானா. இந்நிலையில் தன் காதலரின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டு அவரை பற்றி மிகவும் பெருமையாக போஸ்ட் போட்டிருக்கிறார்.

​Ileana: கர்ப்பமாக இருக்கிறேன்: குட் நியூஸ் சொன்ன இலியானாவுக்கு குவியும் வாழ்த்துவிஜய் சேதுபதி​Vijay SethuPathy செம்ம performer- Takkar Movie Heroine Dhivyansha Kaushik​​கர்ப்பம்​காதலரின் முகம் சரியாக தெரியாத புகைப்படத்தை வெளியிட்டு இலியானா கூறியிருப்பதாவது, கர்ப்பமாக இருப்பது மிகவும் அழகான ஆசிர்வாதம். இந்த அருமையான அனுபவம் எனக்கு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. அதனால் இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கும் நான் அதிர்ஷ்டசாலி என நினைக்கிறேன். எனக்குள் ஒரு உயிர் வளர்வது எவ்வளவு அருமையான விஷயம் என்பதை விவரிக்க முடியவில்லை. நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகும் என் வயிற்றை பார்த்து சந்தோஷமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டா போஸ்ட்​View this post on InstagramA post shared by Ileana D’Cruz (@ileana_official)​​அம்மா​Ileana: திருமணத்திற்கு முன்பு கர்ப்பத்தை அறிவித்த நடிகைகள்இலியானா மேலும் கூறியிருப்பதாவது, நான் விரைவில் உன்னை பார்க்கப் போகிறேன். சில நாட்கள் மிகவும் கடினமாக இருக்கிறது. நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. கண்ணீர் வருகிறது. பின்னர் குற்ற உணர்வு. சின்ன விஷயத்திற்காக அழாமல் இருப்பதற்கு நான் நன்றியுடன் இருக்க வேண்டும். தைரியமாக இருக்க வேண்டும். நான் தைரியமாக இல்லை என்றால் என்ன மாதிரியான அம்மாவாக இருப்பேன் என்கிறார்.

​காதலர்​என்ன மாதிரியான அம்மாவாக இருப்பேன் என தெரியவில்லை. நிஜமாக தெரியவில்லை. ஆனால் என் பிள்ளையை நான் தற்போதே அதிகம் விரும்புகிறேன். இப்போதைக்கு அது போதும் என நினைக்கிறேன். நான் என்னிடம் அன்பாக இருக்க மறக்கும் போது, இந்த அருமையான மனிதர் தான் எனக்கு ஆதரவாக இருக்கிறார். என் கண்ணீரை துடைக்கிறார். ஜோக் சொல்லி சிரிக்க வைக்கிறார். இல்லை என்றால் ஹக் செய்கிறார். அதனால் தற்போது எதுவும் கடினமாக இல்லை என தன் காதலர் பற்றி தெரிவித்துள்ளார் இலியானா.
​வாழ்த்து​இலியானாவின் போஸ்ட்டை பார்த்த திரையுலக பிரபலங்கள் அதை லைக் செய்திருப்பதுடன் நீங்கள் மிகவும் அன்பான, சிறந்த அம்மாவாக இருப்பீர்கள். அதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளனர். இந்த பயணத்தில் நீங்கள் தனியாக இல்லை. உங்களை புரிந்து கொண்டு அன்பு காட்டும் நபர் அருகிலேயே இருப்பது தெரிய வந்து சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
​ஆதரவு​முன்னதாக இலியானா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த உடன் குழந்தையின் தந்தை யார் என சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பினார்கள். திருமணமாகாமல் கர்ப்பத்தை இப்படி அறிவிக்கலாமா என்றார்கள். அதை பார்த்த இலியானாவின் ரசிகர்களோ, குழந்தையின் தந்தை யார் என்பதை உலகிற்கு அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது இலியானாவின் தனிப்பட்ட விஷயம். ஒரு கர்ப்பிணியை விமர்சிக்க வேண்டாம் என்று தெரிவித்தார்கள்.

​Ileana:குழந்தைக்கு தந்தை யார் என கேட்க யாருக்கும் உரிமை இல்லை: இலியானாவுக்கு ரசிகர்கள் ஆதரவு

​ரசிகர்கள்​திருமணமாகாமல் கர்ப்பமாகியிருக்கும் இலியானாவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் ஆதரவாக இருந்து வருகிறார்கள். கர்ப்பிணியான அவரை யாராவது சமூக வலைதளங்களில் விமர்சித்தால் ரசிகர்கள் உடனே பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.