வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்:மோசமான வானிலை காரணமாக, பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நம் நாட்டு பயணியர் விமானம் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![]() |
நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் தங்கள் வான் பரப்பை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளன.இந்நிலையில், ‘இண்டிகோ’ விமானம் நேற்று முன் தினம் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரிலிருந்து குஜராத்தின் ஆமதாபாதிற்கு புறப்பட்டது. மோசமான வானிலை காரணமாக சில மணி நேரங்களில் தரையிறங்க செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, அந்த விமானம் பஞ்சாப் எல்லையில் உள்ள அட்டாரி வழியாக, பாகிஸ்தான் வான் பரப்பை நோக்கி திருப்பி விடப்பட்டது. இதுதொடர்பாக அமிர்தசரஸ் விமானநிலைய கட்டுப்பாட்டாளர், பாக்., அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த விமானம் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
![]() |
நேற்று முன் தினம் இரவு 7:30 மணி முதல் லாகூரின் வடக்குப் பகுதியில் பறந்த இண்டிகோ விமானம், குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு இரவு 8:00 மணிக்கு பத்திரமாக திரும்பியது.
இதுகுறித்து பாகிஸ்தானின் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூத்த உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சர்வதேச விதிகளின்படி மோசமான வானிலை நிலவும் சூழலில் அண்டை
நாடுகளின் வான் பரப்பை பயன்படுத்திக் கொள்ள அனுமதி உள்ளது.’இதன்படி இந்திய விமானம் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement