இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
எதிர்பார்ப்பில் ஜெயிலர்ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகின்றது. பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களுக்கு பிறகு நெல்சனுக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு பறிபோகுமா என பேசிவந்த நிலையில் ரஜினி நெல்சனின் மீது நம்பிக்கை வைத்து ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இப்படம் திரையில் வெளியாகவுள்ளது
ரஜினியின் நம்பிக்கைசமீபகாலமாக ரஜினியின் நடிப்பில் வெளியாகும் படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிகளை பெறவில்லை. குறிப்பாக அவரது நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படம் தோல்வி படங்களாக அமைந்தன. இந்நிலையில் தன் அடுத்த படத்தை வெற்றிப்படமாக கொடுத்து மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் இருக்கும் ரஜினி ஜெயிலர் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளாராம். சமீபத்தில் கூட ஜெயிலர் படத்தை போட்டு பார்த்த ரஜினிக்கு இப்படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாம். மேலும் இப்படம் வெற்றி பெறுவதை தவிர வசூலிலும் இந்தியளவில் சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் ரஜினி இருக்கின்றார்
விக்ரம் பாணியில் ஜெயிலர்கடந்தாண்டு உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ஒரு மல்டி ஸ்டாரர் படமாக வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. இதையடுத்து தற்போது ரஜினியும் அதே பார்முலாவை ஜெயிலர் படத்தில் பயன்படுத்தியுள்ளார். மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூக் என இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார்களை ஜெயிலர் படத்தில் நடிக்க வைத்து ஒரு மல்டி ஸ்டாரர் படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார் ரஜினி. எனவே ஜெயிலர் படமும் விக்ரம் போல மாஸ் ஹிட்டடிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்
ஹைப்பை அதிகரிக்கும் ஜெயிலர்கோலிவுட் வட்டாரத்தில் ஜெயிலர் படத்தை பற்றிய பாசிட்டிவ் டாக் அதிகம் இருந்து வருகின்றது. படம் நன்றாக வந்திருப்பதாகவும், படத்தின் ப்ரீ பிசுனஸ் அமோகமாக இருப்பதாகவும் பல பேச்சுக்கள் போய்க்கொண்டிருக்கின்றன. மேலும் இதுவரை படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள், கிலிம்ப்ஸ் வீடியோ என அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே இப்படத்தில் ரஜினி மற்றும் நெல்சனின் தரமான சம்பவத்தை நாம் காணலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக ஜெயிலர் திரைப்படம் பூர்த்தி செய்யும் என்பதே கோலிவுட் வட்டாரத்தை சார்ந்தவர்களின் கருத்தாக இருக்கின்றது. இந்நிலையில் விரைவில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரம்மண்டமாக நடைபெற இருப்பதாக தெரிகின்றது
ரஜினியுடன் இணையும் விஜய் ?இந்நிலையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பற்றிய ஒரு செய்தி தான் செம வைரலாகி வருகின்றது. அதாவது ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய்யை சிறப்பு விருந்தினராக அழைக்க படக்குழு முயற்சித்து வருகின்றதாம். ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை மாதம் இறுதியில் சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது. இவ்விழாவில் இந்திய திரையுலகை சேர்ந்த சூப்பர்ஸ்டார் நடிகர்கள் பலர் பங்கேற்க இருக்கின்றனர். எனவே கோலிவுட்டில் இருந்து தளபதி விஜய்யை ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைக்க படகக்குழு முடிவெடுத்துள்ளதாம். தற்போது இதற்கான முயற்சியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. ஒருவேளை விஜய் மற்றும் ரஜினி ஒரே மேடையில் இருந்தால் அது ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களுக்கே கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது