Kamal: இந்தியன் 2 மூலம் அடுத்தகட்டத்திற்கு செல்லும் கமல்..வாய்பிளக்கும் கோலிவுட்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
உலகநாயகன்
கமல்
ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் பிஸியான நடிகராகிவிட்டார். இடையில் கமல்ஹாசன் நான்கு வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். பிக் பஸ் நிகழ்ச்சி, அரசியல் என பிஸியான கமல் விஸ்வரூபம் 2 படத்திற்க்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்க கமிட்டாகவில்லை.

அவர் நடிப்பில் உருவான இந்தியன் 2 திரைப்படம் பல பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டது. கிட்டத்தட்ட அப்படம் கைவிடப்பட்டதாகவே பலர் பேசி வர தற்போது தன் முயற்சியால் மீண்டும் இந்தியன் 2 படத்தை துவங்கியுள்ளார் கமல். ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து 2020 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் படக்குழுவை சேர்த்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து கொரோனா ஊரடங்கு வந்தது. இதன் காரணமாக படப்பிடிப்பு நின்றுவிட்டது. இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடையே பிரச்சனை எழுந்தது. இவ்வாறு பல சிக்கல்களை சந்தித்து வந்த இந்தியன் 2 படம் தற்போது துவங்கப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பது நடைபெற்று வருகின்றது.

அமிதாப் பச்சனை தலைவர் 170 படத்தில் நடிக்க வைக்க இப்படி ஒரு காரணம் இருக்கா ? மாஸ்டர் பிளான் போட்ட ரஜினி ..!

இந்நிலையில் இப்படத்திற்காக உலகநாயகன் கமல் தன்னையே வருத்திக்கொண்டு நடித்து வருவதாக தகவல்கள் வருகின்றது. அதாவது இந்தியன் தாத்தா வேடத்தில் நடித்து வரும் கமல் அதி தொழில்நுட்பத்தில் கொண்ட பிராஸ்தடிக் மேக்கப்பை பயன்படுத்தி வருகின்றார். அந்த மேக்கப் போட்டு நடித்து முடிக்கும் வரை கமலால் உணவருந்த முடியாது. தண்ணீர் மட்டுமே குடிக்க முடியுமாம்.

கிட்டத்தட்ட 8 மணி நேரம் கமல் உணவு அருந்தாமல் பட்டினியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். தற்போது கமலுக்கு கிட்டத்தட்ட 70 வயதாகும் நிலையில் உணவு அருந்தாமல் சண்டை காட்சிகளிலும், பரபரப்பான காட்சிகளிலும் நடித்து வருவதை பார்த்து ஒட்டுமொத்த படக்குழுவும் அதிர்ந்து போயுள்ளார்களாம்.

இந்நிலையில் இது ஒருபக்கம் இருக்க கமலின் திரைவாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இந்தியன் 2 உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு சீனிலும் பிரம்மாண்டத்தை காட்டி வருகின்றார் ஷங்கர். அதுமட்டுமல்லாமல் படத்தின் கதைக்கரு மிகவும் அழுத்தமாகவும், திரைக்கதை சுவாரஸ்யமாகவும் இருக்கின்றதாம்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

எனவே ரிலீசுக்கு முந்தைய வியாபாரத்திலே இந்தியன் 2 பலகோடிகளை சம்பாதிக்க வாய்ப்புள்ளது. இதையடுத்து விக்ரம் படம் செய்த வசூல் சாதனையை இந்தியன் 2 முறியடிக்கும் என்றும், இந்தியளவில் இப்படம் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்தாண்டு துவக்கத்தில் இப்படம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.