Kamal Haasan: கமல் பற்றிய ரூ. 150 கோடி மேட்டர் உண்மை இல்ல, ஆனால்…: பரபரக்கும் தெலுங்கு மீடியா

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Kamal Haasan in Project K?:ப்ராஜெக்ட் கே படக்குழு உலக நாயகன் கமல் ஹாசனுக்கு ஒரு கோரிக்கை விடுத்திருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

​ப்ராஜெக்ட் கே​நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் ப்ராஜெக்ட் கே. அந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். மேலும் பாலிவுட் ஜாம்பவானான அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தான் வில்லனாக நடிக்குமாறு கமல் ஹாசனிடம் கேட்டார்கள். பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க ஆர்வமாக இருக்கிறார் கமல் என்று கூறப்படுகிறது.திவ்யான்ஷா​Vijay SethuPathy செம்ம performer- Takkar Movie Heroine Dhivyansha Kaushik​​கமல்​ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்க 20 நாட்கள் கால்ஷீட் கொடுக்குமாறு கமலிடம் கேட்டதாம் படக்குழு. ஆனால் தற்போது 30 நாட்கள் ஒதுக்கிக்கொடுக்க முடியுமா என படக்குழு கேட்டிருக்கிறதாம். ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்க ஆசையுடன் இருப்பதால் நிச்சயம் 30 நாட்கள் டேட்ஸ் கொடுப்பார் என்று நம்பப்படுகிறது என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

​ரூ. 150 கோடி​முன்னதாக ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்க கமல் ஹாசனுக்கு ரூ. 150 கோடி சம்பளம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. அடேங்கப்பா, ஹீரோவாக நடிக்க பிரபாஸுக்கே ரூ.50 கோடி தான். ஆனால் வில்லனாக வந்து மிரட்ட ஆண்டவருக்கு ரூ. 150 கோடியாம். இதை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. 20 நாட்களில் ரூ. 150 கோடி சம்பாதிக்கப் போகிறார் கமல் ஹாசன் என சினிமா ரசிகர்கள் வியந்து பேசினார்கள். அதன் பிறகு ரூ. 150 கோடி குறித்த உண்மை தெரிய வந்தது.

​ஹீரோ பிரபாஸுக்கு ரூ. 50 கோடி, ஆனால் வில்லன் கமலுக்கு ரூ. 150 கோடி சம்பளமா?!

​உண்மை இல்லை​ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்க கமல் ஹாசனை அணுகியிருப்பது உண்மை தான். ஆனால் அவருக்கு ரூ. 150 கோடி எல்லாம் சம்பளம் பேசவில்லை என படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு கமல் ஹாசன் தான் சரியாக இருப்பார். அவரை தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என ப்ராஜெக்ட் கே பட தயாரிப்பாளர் அஸ்வினி தத் கூறியதாக தகவல் வெளியானது.
​கிராஃபிக்ஸ்​ப்ராஜெக்ட் கே படத்தின் 70 சதவீத காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டார்கள். ஆனால் படத்தில் கிராஃபிக்ஸ் அதிகம் என்பதால் அந்த வேலை தான் தொடர்ந்து நடந்து வருகிறது என்கிறார் அஸ்வினி தத். கடந்த 5 மாதங்களுக்கு முன்பே கிராஃபிக்ஸ் பணியை துவங்கிவிட்டோம். அடுத்த ஆண்டு வரை அந்த பணி தொடர்ந்து நடக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Samantha: வெளிநாட்டு கிளப்பில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆடிய சமந்தா, நடிகர் வருண் தவான்
https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/samantha-ruth-prabhu-dances-for-oo-solriya-mama-song-at-a-club-in-serbia/articleshow/100912779.cms

​இந்தியன் 2​கமல் ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியன் 2 படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். அந்த படத்தில் நடித்திருக்கும் சித்தார்த் இந்தியன் 2 பற்றி உயர்வாக பேசியிருக்கிறார். அவர் சொன்னதை கேட்ட பிறகு படத்தை உடனே பார்க்க வேண்டும் என்கிற ஆவல் பலருக்கும் வந்துவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.