Nayanthara: நயன்தாரா பற்றி யாரும் சொல்லாத ரகசியம் சொன்ன ஆர்யா

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Lady superstar Nayanthara: தன்னுடன் சேர்ந்து நடித்த நயன்தாரா பற்றிய ரகசியம் ஒன்றை கூறியிருக்கிறார் ஆர்யா.

​ஆர்யா​நயன்தாராவும், ஆர்யாவும் சேர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்தார்கள். நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக அப்பொழுது பேச்சாக இருந்தது. அவர்கள் லிவ் இன் முறைப்படி வாழ்ந்ததாகவும் பேசப்பட்டது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் நயன்தாரா பற்றி பேசியிருக்கிறார் ஆர்யா. மேலும் நயன்தாரா பற்றிய ஒரு ரகசியத்தையும் கூறியிருக்கிறார்.விஜய் சேதுபதி​Vijay SethuPathy செம்ம performer- Takkar Movie Heroine Dhivyansha Kaushik​​டிரைவ்​ஆர்யா நடித்த காதர்பாட்தா என்ற முத்துராமலிங்கம் படம் அண்மையில் வெளியானது. அந்த படத்தை விளம்பரம் செய்ய பேட்டிகள் கொடுத்தார் ஆர்யா. அதில் ஒரு பேட்டியில் எந்த நடிகையுடன் சேர்ந்து காரில் நெடுந்தூரம் டிரைவ் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆர்யாவோ நயன்தாராவுடன் லாங் டிரைவ் செல்ல வேண்டும் என பதில் அளித்தார்.

​Varun Tej: 5 ஆண்டுகளாக ரகசியமாக காதலித்த நடிகை லாவண்யா, நடிகர் வருண் தேஜ்

​ரகசியம்​ஆர்யா மேலும் கூறியதாவது, நயன்தாராவுடன் டிரைவ் போனால் நாம் தான் கார் ஓட்ட வேண்டும். அவருக்கு கார் ஓட்டத் தெரியாது என்றார். நயன்தாதராவுக்கு டிரைவிங் தெரியாது என்கிற ரகசியத்தை ஆர்யா கூறினார். ஆனால் அதை நம்ப முடியவில்லையே என்கிறார்கள் ரசிகர்கள். அப்போ படங்களில் தலைவி கெத்தாக கார் ஓட்டியது எல்லாம் சும்மாவா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
​நண்பர்கள்​ஆர்யாவும், நயன்தாராவும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அதனால் தான் லாங் டிரைவ் என்றதும் நயன்தாராவின் பெயரை சொல்லியிருக்கிறார். இதற்கிடையே நயன்தாராவுக்கு முதலில் டிரைவிங் கற்றுக் கொடுங்கள் அன்பான இயக்குநரே என நயன்தாரா ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தலைவி கார் ஓட்ட நீங்களும், உயிரும், உலகும் ஜாலியாக லாங் டிரைவ் போக வேண்டாமா என்கிறார்கள் ரசிகர்கள்.

​திருமண நாள்​நயன்தாரா நேற்று முன்தினம் தான் தன் முதலாவது திருமண நாளை கொண்டாடினார். முதல் திருமண நாளில் நயன்தாராவை திக்குமுக்காட செய்துவிட்டார் விக்னேஷ் சிவன். தன் நண்பர் நவீனை வரவழைத்து நயன்தாராவுக்காக ஸ்பெஷலான ஃப்ளூட் நிகழ்ச்சி நடத்தினார். தனக்காக விக்னேஷ் சிவன் செய்த ஸ்பெஷல் ஏற்பாட்டை பார்த்த நயன்தாரா கண் கலங்கிவிட்டார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
Nayanthara: என் உயிரோட ஆதாரம் நீங்கள் தானே: முதல் திருமண நாளில் நயன், மகன்கள் போட்டோவை வெளியிட்டு விக்னேஷ் சிவன் உருக்கம்​

​மகன்கள்​உயிர் மற்றும் உலகின் லேட்டஸ்ட் புகைப்படத்தையும் வெளியிட்டார் விக்னேஷ் சிவன். இரண்டு செல்லங்களின் முகம் தெரியாதபடி புகைப்படம் வெளியிட்டார். அடேங்கப்பா, உயிரும், உலகும் நன்றாக வளர்ந்துவிட்டார்களே. அப்படியே கொஞ்சம் முகத்தையும் காட்டுங்கள் அன்பான இயக்குநரே. உங்களை மாதிரி இருக்கிறார்களா, நயன்தாரா போன்று இருக்கிறார்களா என பார்க்க ஆசையாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

​Kamal Haasan: கமல் பற்றிய ரூ. 150 கோடி மேட்டர் உண்மை இல்ல, ஆனால்…: பரபரக்கும் தெலுங்கு மீடியா​
​கெரியர்​கெரியரை பொறுத்தவரை ஷாருக்கானின் ஜவான் இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. அட்லி இயக்கியிருக்கும் அந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. மேலும் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவியும், நயன்தாராவும் சேர்ந்து நடித்திருக்கும் இறைவன் படம் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. தனி ஒருவன் கூட்டணி மீண்டும் சேர்ந்திருப்பதால் இறைவன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இது தவிர்த்து நயன்தாரா கையில் மூன்று படங்கள் இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.