சென்னை : நடிகை நீலிமா ராணியின் முதல் கணவர் யார் என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு டென்ஷன் ஆகாமல் கூலாக பதில் அளித்துள்ளார்.
கமல்ஹாசன், சிவாஜி நடித்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நீலிமா ராணி, தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
மேலும், சின்னத்திரையில் மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள், போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் : நடிகை நீலிமா ராணியை தெரியாதவர்களே இருக்க முடியாது, அந்த அளவுக்கு பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்து விட்டார். நீலிமா ராணியின் திரைப்பயணமே வெள்ளித்திரையாக இருந்தாலும், இளம் பருவத்தில் திரைப்படங்களில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால், சின்னத்திரையில் நுழைந்து கலக்கினார்.
அதே இளமையுடன் : நடிகை நீலிமா 2008ஆம் ஆண்டு இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவது ஒரு பெண்குழந்தை பிறந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும், இன்னும் அதே இளமையுடன் இருக்கும் நீலிமா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஆகஸ்ட் 16 1947 : நடிகை நீலிமா அண்மையில் வெளியான ஆகஸ்ட் 16 1947 என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் நடித்த காட்சி வெறும் ஐந்து நிமிடமே வந்தாலும், அந்த கேரக்டரை அனைவரும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் நீலிமா, கௌதம் கார்த்திக்கின் அம்மாவாக நடித்துள்ளார்.
முதல் கணவர் யார் : இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி நீலிமா ராணி அளித்திருந்தார். அந்த பேட்டியில் பல ரசிகர்கள் உங்களின் முதல் கணவர் யார் என் கூகுளில் அதிகம் தேடி இருக்கிறார்கள். இப்போது நீங்கள் இந்த நிகழ்ச்சியில் இருப்பதால், நீங்களே முதல் கணவர் குறித்து சொல்லி விடுங்கள் என்று செய்தியாளர் கூறினார்.
கூல் பதில் : இந்த கேள்வியை கேட்டு கோவப்படுவார் என்று பார்த்தால், எனக்கு தெரிஞ்சு ஒரே கணவன் இசைவானன் மட்டும் தான். என்னுடைய முதல் கணவனும் இசைவானன் தான், இரண்டாவது கணவனும் இசைவானன் தான் என கூலாக பதில் அளித்துள்ளார் நீலிமா ராணி. தற்போது இந்த பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.