லுாதியானா : பஞ்சாபில் ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை மேற்கொள்ளும் நிறுவனத்திற்குள் புகுந்து, 7 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபில் லுாதியானா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரங்களில், தனியார் நிறுவனம் ஒன்று பணத்தை நிரப்பும் பணியை மேற்கொள்கிறது.
நேற்று இந்நிறுவனத்திற்குள் ஆயுதங்களுடன் புகுந்த 10 கொள்ளையர்கள், செக்யூரிட்டிகளை தாக்கி பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் 7 கோடி ரூபாயை எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, லுாதியானா போலீஸ் கமிஷனர் மன்தீப் சிங் சித்து கூறியதாவது:
கொள்ளையர்கள் பணத்தை எடுத்துச் சென்றதுடன், கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்கையும் எடுத்துச் சென்றுஉள்ளனர்.
இச்சம்பவத்தில் இரண்டு செக்யூரிட்டிகளிடம் ஆயுதங்கள் இருந்தும், கொள்ளையர்களை நோக்கி அவர்கள் சுடாதது, பாதுகாப்பு பெட்டகத்தில் பணத்தை வைக்காமல் வெளியே வைத்துள்ளது, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement