கோல்கட்டா: ரயில் வரும் நேரத்தில், தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபரை உடனடியாக காப்பாற்றிய பெண் போலீசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் புர்மா மெத்னிபூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் வந்து நின்று கொண்டிருந்த நபர், திடீரென தண்டவாளத்தில் இறங்கி ரயில் வரும் பாதையில் தலை வைத்து படுத்தார். இதனை பார்த்த ரயில்வே போலீசாக பணிபுரியும் சுமதி என்பவர், உடனடியாக கீழே இறங்கி அந்த நபரை பிடித்து இழுத்து காப்பாற்றினார். போலீசுக்கு, உதவிக்கு மேலும் 2 பேர் வந்தனர்.
அந்த நேரத்தில், அந்த பாதையில் ரயில் கடந்து சென்றது. சுமதி, சமயோசிதமாக செயல்பட்டு, உடனடியாக செயல்பட்டதால், அந்த நபரின் உயிர் காப்பாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுமதியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement