Shubman Gill: அம்பயரின் தவறான முடிவு! கடுப்பில் சுப்மன் கில் செய்த காரியம்!

ஓவலில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் வெற்றி தற்போது ஆஸ்திரேலியாவை நோக்கியே உள்ளது, 4வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் அவுட் ஆன சம்பவம் பெரும் சர்ச்சையைக் ஏற்ப்படுத்தி உள்ளது. கல்லியில் நின்று கொண்டிருந்த கேமரூன் கிரீனிடம் கில் கேட்ச் ஆனதும், மூன்றாவது நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோவின் நீண்ட பரிசோதனைக்குப் பிறகு அவர் அவுட் என்று அறிவிக்கப்பட்டதும் சர்ச்சை வெடித்தது.  கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கில்லுக்கு அநியாயம் நடந்துள்ளதாக தங்களது ஆதரவாக வெளிப்படுத்தி உள்ளனர். கில்லுக்கு மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்ததும், கில்லை தாண்டி கேப்டன் ரோஹித் ஷர்மாவும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.  

444 ரன்களைத் டார்கெட்டாக வைத்து இந்தியா 4வது நாள் ஆட்டநேர முடிவில் 164/3 என்ற ஸ்கோரை எட்டிய நிலையில், கில் தனது சமூக ஊடகங்களான Instagram மற்றும் Twitter இரண்டிலும், கிரீன் பிடித்த கேட்சை பதிவிட்டு தனது விரக்தியை வெளிப்படுத்தி உள்ளார்.  கில் பகிர்ந்த ஸ்கிரீன் ஷாட்களின்படி, கேட்சை முடிப்பதற்குள் பந்து தரையில் பட்டது தெளிவாகத் தெரிகிறது, 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த கில் மிகவும் கோபத்தில் இருப்பது இதில் தெரிகிறது. கில் ஸ்காட் போலண்ட் பந்தை ஆஃப்-ஸ்டம்ப் லைனுக்கு சற்று அகலமாக அடிக்க முயன்றபோது, இந்தச் சம்பவம் நடந்தது.  மூன்றாம் நடுவருக்கு சிறிது நேரம் சரிபார்ப்பிற்கு பிறகு அவுட் கொடுத்தார்.  இந்த சர்ச்சைக்குரிய அவுட் மூலம் இந்தியா 41 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது, அதைத் தொடர்ந்து ரோஹித் மற்றும் சேதேஷ்வர் புஜாரா இரண்டாவது விக்கெட்டுக்கு 50 பிளஸ் ரன்களைச் சேர்த்தனர். இருப்பினும், இருவரும் அடுத்தடுத்து வீழ்ந்தனர், ரோஹித் 43 ரன்களில் நாதன் லியானுக்கு எதிராக ஸ்வீப் செய்ய முயற்சித்தபோது எல்பிடபிள்யூவில் சிக்கினார், அதே நேரத்தில் புஜாரா 27 ரன்களில் பாட் கம்மின்ஸுக்கு எதிராக ஒரு அப்பர்கட் விளையாடியபோது கேட்ச் ஆனார்.

pic.twitter.com/pOnHYfgb6L

— Shubman Gill (@ShubmanGill) June 10, 2023

எவ்வாறாயினும், விராட் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானே, இந்தியாவை சரிவில் இருந்து மீட்டு நான்காவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர், இந்தியா 164/3 என்ற நிலையில் 4வது நாள் முடிவடைந்தது, மேலும் இப்போட்டியில் வெற்றிபெற இந்தியாவிற்கு இப்போது 280 ரன்கள் தேவை.  ஆஸ்திரேலியா அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்சிப் பட்டத்தை பெற 7 விக்கெட்கள் தேவை.  விராட் மற்றும் ரஹானே குறிப்பிடத்தக்க பாட்னர்ஷிப்பை கொடுக்கும் வகையில், அடுத்து வரும் கேஎஸ் பரத், ஜடேஜா, தாகூர் போன்றவர்களுக்கு உதவும்.  2021ம் ஆண்டு காபாவில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்த் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.