சென்னை : நடிகர் சித்தார்த் அதிதி ராவை காதலிப்பதை மறைமுகமாக ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யன்ஷா கெளசிக், முனீஷ்காந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெள்ளிக்கிழமை டக்கர். திரைப்படம் வெளியானது.
இத்திரைத்தின் முதன் மூலம் சித்தார்த் அதிரடி ஆக்ஷ்ன் எடுத்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இருவருக்கும் காதல் : சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவிவருகிறது. தெலுங்கில் மகாசமுத்திரம் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அந்த படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காதல் கிசுகிசு : இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவில் இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆடுவது, பாட்டுப்பாடுவது, சினிமா நிகழ்ச்சி, முக்கிய நடிகர்களின் திருமணம், வரவேற்பு என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் வருகின்றனர். பொன்னியின் செல்வன் 1 பாடல் வெளியீட்டு விழாவிற்கு இருவரும் கைகளை கோர்த்தபடி வந்து மீடியாக்களின் கண்ணில் கொத்தாக சிக்கினர்.
டக்கர் ப்ரோமோஷன் : இந்த நிலையில், டக்கர் பட புரமோட் செய்யும் விதமாக ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் சித்தார்த் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் யாருடன் பாடிக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். கேட்டார். அதற்கு பதிலளித்த சித்தார்த் என்னுடைய ஊரில் உள்ள அதிதி தேவ பவா உடன் என்று கூறினார்.
உண்மையை சொன்ன சித்தார்த் : இதன் மூலம் அதிதி ராவை காதலிப்பதை மறைமுகமாக சித்தார்த் உறுதிப்படுத்தி இருப்பதாக அவர் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகர் சித்தார்த், முன் கமலின் மகள் ஸ்ருதிஹாசனை காதலித்து வந்தார்.பின் இருவரும் கருத்து வேறுபாடுகாரணமாக பிரிந்துவிட்டனர்.