இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
புது கூட்டணிவிஜய் லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கின்றார். அட்லீ அல்லது தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் தான் தளபதி 68 படத்தை இயங்குவார்கள் என எதிர்பார்த்த நிலையில் திடீரென விஜய் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்தது அனைவர்க்கும் ஆச்சர்யமாக இருந்தது. முதல்முறையாக விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணி இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது தளபதி 68 படத்தின் மீதான ஹைப்பை ஏற்றியுள்ளது. புதிய கீதை படத்திற்கு பிறகு 20 வருடங்கள் கழித்து விஜய்யின் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கின்றார்
நம்பிக்கை தரும் வெங்கட் பிரபுவெங்கட் பிரபு மாநாடு என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற படத்தை இயக்கினார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து வெங்கட் பிரபு விஜய்யை இயக்கப்போகின்றார் என்றவுடன் சில ரசிகர்கள் இதனை விமர்சித்தனர். ஆனால் அஜித்திற்கு மங்காத்தா, சிம்புவிற்கு மாநாடு என இரு நடிகர்களுக்கும் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்த படங்களை வெங்கட் பிரபு இயக்கியுள்ளதால், கண்டிப்பாக தளபதி 68 படத்தையும் தரமான ஒரு படைப்பாக கொடுப்பார் என நம்பிக்கையில் பெரும்பாலான ரசிகர்கள் இருக்கின்றனர்.
சம்பள விஷயத்தில் சாதனைபடத்திற்கு படம் வசூலில் விஜய்யின் படங்கள் சாதனை படைத்து வருகின்றன. அதன் காரணமாக அவரின் சம்பளமும் படத்திற்கு படம் உயர்ந்து வருகின்றது. தற்போது தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. லியோ படத்திற்கு 175 கோடி சம்பளமாக வாங்கிய விஜய் தளபதி 68 படத்திற்காக 200 கோடி சம்பளமாக வாங்கவுள்ளாராம். இதன் மூலம் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார் விஜய். கண்டிப்பாக அடுத்த படத்திற்கான இவரின் சம்பளம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
அடுத்த அப்டேட்தளபதி 68 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதையடுத்து தற்போது விஜய் லியோ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 68 மற்றும் லியோ அப்டேட் வெளியாகும் என எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் தளபதி 68 படத்தின் பூஜை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு துவங்கும் என்றும், படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அதிகாரபூர்வமான அறிவிப்புகள் லியோ படம் வெளியான பின்னரே தான் வரும் என வெங்கட் பிரபுவே சமீபத்தில் கூறியிருந்தார்.
உறுதி அளித்த யுவன்இந்நிலையில் சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா தளபதி 68 படத்தை பற்றி பேசியது தான் செம வைரலாகி வருகின்றது. அவர் கூறியதாவது, தளபதி 68 படத்தில் பணியாற்றுவதை நினைத்து ஆர்வமாக உள்ளேன் எனவும், இப்படத்தின் பின்னணி இசை கண்டிப்பாக மங்காத்தா படத்தின் பின்னணி இசை போல செம மாஸாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் யுவன். இதையடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. விஜய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா 20 வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்தின் மூலம் இணைவது ஒருபக்கம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், மறுபக்கம் யுவன் ஷங்கர் ராஜா தளபதி 68 பின்னணி இசை மாஸாக வரும் என நம்பிக்கையாக பேசியது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது