வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ., – எம்.பி., யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், உத்தர பிரதேசத்தில் நடந்த பேரணியில் உருக்கமாகப் பேசினார்.
![]() |
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், லோக்சபா பா.ஜ., – எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், 66, மீது, மல்யுத்த வீராங்கனையர் பாலியல் புகார் தெரிவித்தனர். புதுடில்லியில் ஒரு மாதம் நடந்த போராட்டத்திற்கு பின், மல்யுத்த வீரர்களுடன், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பேச்சு நடத்தினார்.
இதன் பின், வரும் 15 வரை போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து, புதுடில்லி போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், உ.பி., மாநிலம் கோண்டா மாவட்டத்தில் நடந்த பா.ஜ., பேரணியில், பிரிஜ் பூஷன் சரண் சிங் பேசியதாவது:சில நேரங்களில் கண்ணீரையும், சில சமயங்களில் விஷத்தையும் குடிக்கிறோம். அப்போது தான் இந்த சமூகத்தில் வாழ முடியும்.
![]() |
தற்போது என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், என் அன்புக்கு கிடைத்தப் பரிசாகவே பார்க்கிறேன். என்னை துரோகி என கூறுகின்றனர். மனம் போன போக்கில் என் மீது சேற்றை வாரி வீசுகின்றனர்.வரும் 2024 லோக்சபா தேர்தலில், மீண்டும் கைசர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடுவேன். அறுதிப் பெருன்பான்மையுடன் மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் உருக்கமாகப் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement