அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த, ஓ பன்னீர்செல்வத்தின் வழக்கு, வருகின்ற ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்த மேல்மறையீட்டு வழக்கு விசாரணை, கடந்த வாரம் முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
விசாரணையின்போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் மற்றும் அதிமுக தரப்பு வழக்கறிஞர் தங்களது வாதத்தை முன்வைத்தனர்.
அதில், பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் இருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச் செயலாளர் தேர்வு அனைத்துமே கட்சிகளின் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
மேலும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களை நீக்கக்கூடிய அதிகாரம் அதிமுகவின் பொது குழுவுக்கு உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார்.
தொடர்ந்து இரு நாட்கள் வழக்கு விசாரணை நடந்த நிலையில், இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்றது. இன்றுடன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக தரப்பு வாதம் முடிவடைந்துள்ளது.
ஓபிஎஸ் தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணை ஜுன்15ம் தேதிக்கு வழக்கு விசாரணத்த தள்ளி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.