சின்னத்திரை நடிகை சங்கீதா கேகே நகர் பிடி ராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் திருடர்கள் புகுந்து விட்டதாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விஜய்யின் ‘மாஸ்டர்’, ஆர்ஜே பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் சங்கீதா. ஆனந்த ராகம் போன்ற சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் தனது வீட்டு வாசலில் உள்ள சில பொருட்கள் காணமல் போனதால் சந்தேகமடைந்து, நேற்று தனது அபார்ட்மெண்ட்டில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அப்போது உயர் ரக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு அங்கிருந்து செருப்பை லிப்டில் தள்ளிவிட்டு திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நடிகை சங்கீதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Meena: இரண்டு நாளில் திருமணத்தை வைத்துக்கொண்டு மீனா செய்த காரியம்: பிரபலம் பகிர்ந்த தகவல்.!
அதில், பாதுகாப்பு காரணமாக தான் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம். சர்வ சாதரணமாக இருவர் உள்ளே நுழைந்து காணிகளை திருடி சென்றுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. எந்த நோக்கத்திற்காக அந்த இளைஞர்கள் இங்கு வந்தார்கள். எதுவும் கிடைக்காத காரணத்தால் காலணிகளை திருடி சென்றார்களா? என தெரியவில்லை என கூறியுள்ளார்.
மேலும், ஒரு எச்சரிக்கை காரணமாக இந்த வீடியோவை வெளியிடுவதாகவும், இதுக்குறித்து போலீசில் புகார் அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை சங்கீதா. அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Kanguva: ‘கங்குவா’ படத்தின் மிரட்டலான அப்டேட்: சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.!