தூத்துக்குடி மாவட்டத்தில் கணவரின் குடிப்பழக்கத்தால் மன வேதனையடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜபொண்ணு. இவரது மனைவி விஜயலட்சுமி (20). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜ பொண்ணு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து நேற்று முன்தினம் ராஜபொண்ணு வியாபாரத்தில் கிடைத்த பணத்தில் பெரும் பகுதியை மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜபொண்ணு குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்று உள்ளார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த விஜயலட்சுமி கணவரின் குடிப்பழக்கத்தால் மன வேதனையடைந்து சேலையால் தூக்குப்போட்டு கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விஜயலட்சுமிடை மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் விஜயலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விஜயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.