கவர்ச்சியோ கவர்ச்சி.. ஸ்டார் ஹோட்டலில் அழகான பெண்.. ஆசைஆசையாய் ஓடிய சபலிஸ்ட்.. கடைசியில் பார்த்தால்?

கோவை: இளம் பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம் என்று சொல்வதற்காகவே, ஒரு செயலி உள்ளதாம்.. இதில் ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்கள் பதிவிடப்பட்டு வந்துள்ளது.. இதற்கெல்லாம் யார் காரணம்?

ஆண், பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம், இதற்காக ஸ்பெஷல் ஆப்கள் (செயலிகள்) பயன்பாட்டில் உள்ளன என்று கூறி, நிறைய மோசடிகள் நடப்பதாக கோவை சைபர் கிரைம் போலீசுக்கு புகார்கள் வந்துள்ளன..

நாளுக்கு நாள் இந்த புகார்கள் அதிகரிக்கவும், போலீசார் இந்த விசாரணையில் குதித்தனர்.. அப்போது, இது தொடர்பாக மொத்தம் 7 பேர் சிக்கினார்கள். இவர்கள்தான், இந்த மோசடிப்பேர்வழிகள் என்பதும் உறுதியானது.. இதையடுத்து, போலீசார் மும்பைக்கே நேரடியாக சென்று இவர்களை கைது செய்துள்ளனர்.

7 பேர்: உல்வேயை சேர்ந்த அப்சல் ரகுமான் (24). இவரது கூட்டாளிகள் கர்ணன் (24), தமிழரசன் (23), மணிகண்டன் (22), ஜெயசூர்யா பாண்டியன் (25), விக்னேஷ் வீரமணி (25), பிரேம்குமார் (33) உள்ளிட்ட 7 இளைஞர்களையும் கைது செய்தனர்.. அனைவரையும் கோவை அழைத்து வந்து விசாரித்தனர்.. அப்போதுதான், அந்த பயங்கரம் வெளிவந்தது..

இதுகுறித்து போலீசார் சொன்னதாவது: மொத்தம் 7 பேர் சிக்கி உள்ளனர்.. விபச்சாரத்திற்கு இளம்பெண்கள், இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று அறிவித்து, கவர்ச்சி போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிடுவார்கள்.. இதற்காக பிரத்யேகமாக செயலி ஒன்றையும் கண்டுபிடித்து, அதிலும், இந்த கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு விளம்பரம் செய்துள்ளனர்..

 Who are the seven people and dating app swindles millions of young women

இதைப்பார்த்த ஆண்களும், பெண்களும், அதில் பதிவிடப்பட்டிருக்கும் செல்போன் நம்பர்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.. நாங்களும் ஜாலியாக இருக்க விரும்புகிறோம்.. இளம்பெண் மற்றும் இளைஞர்கள் வேண்டும் என்று கேட்பார்கள்.. அதுபோல கேட்பவர்களிடம், இந்த கும்பல், அவர்களின் வாட்ஸ் அப்பிற்கு சில போட்டோக்களை அனுப்பி வைக்கும்.. அவை எல்லாமே கவர்ச்சியான இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களின் போட்டோக்கள் ஆகும்..

இந்த போட்டோக்களில், நீங்கள் யாருடன் ஜாலியாக இருக்க விரும்புகிறீர்களோ அவரை தேர்வு செய்து சொல்லுங்கள் என்று இந்த கும்பல் கேட்கும்.. உடனே சம்பந்தப்பட்டவர்கள், இந்த பெண் வேண்டும், அந்த நபர் வேண்டும் என்று சாய்ஸ்களை சொல்வார்கள்.. இதற்கு அடுத்தபடியாக ரேட் பேசுவார்கள்.. ஒரு முழு இரவுக்கு ரூ.25 ஆயிரம், ஒரு மணி நேரத்துக்கு ரூ.6 ஆயிரம் என்று ரேட் பேசி முடிப்பார்கள். பிறகு, பெண்ணுடன் ஜாலியாக இருக்க வேண்டுமானால், முதலில் அட்வான்ஸ் செலுத்துங்கள் என்பார்கள்..

அட்வான்ஸ்: அந்த சபலப்பேர்வழிகளும், ஜாலியாக இருக்க போகிறோம் என்ற கனவில், அந்த கும்பல் கேட்ட பணத்தையும் வங்கி கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்துவிடுவார்கள்.. அட்வான்ஸ் பணம் கிடைத்ததுமே, மறுபடியும் அந்த கும்பல் சம்பந்தப்பட்ட கஸ்டமருக்கு போனை போட்டு, நீங்கள் கேட்ட அந்த பெண், இந்த ஹோட்டலில்தான் தங்கியிருக்கிறார்.. உங்களுக்காக காத்து கொண்டிருக்கிறார் என்பார்கள்.. உடனே, அந்த ஓட்டலுக்கு சபலபேர்வழிகள் விரைந்து செல்வார்கள்..

 Who are the seven people and dating app swindles millions of young women

விசாரணை: அங்கு சென்று போன் அடித்தால், “நீங்க கேட்ட பெண் பிசியாக இருக்கிறார்… காத்திருக்கவும்” என்பார்கள்… கொஞ்ச நேரம் கழித்து போன் செய்தார், செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுவிடும்.. அதற்கு பிறகுதான், தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதே சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியவரும்..

இப்படியே நைசாக பேசி பேசியே பல லட்சங்களை, கறந்து விட்டது அந்த கும்பல்.. கோவை தவிர, பல்வேறு முக்கிய நகரங்களிலும் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். இந்த கும்பலை சேர்ந்தவர்கள், சில இளைஞர்கள் “கால் பாயாக” மாறி உள்ளனர்.. இளைஞர்களின் போட்டோ, ஆவணங்கள் உள்ளிட்டவைகளை பெற்று அதன் மூலம் வங்கி கணக்கு மற்றும் சிம்கார்டு வாங்கி மோசடியில் இவர்கள் ஈடுபட்டும் வந்திருக்கிறார்கள்.. 7 பேரிடமும் விசாரித்து கொண்டிருக்கிறோம்” என்றனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.