கவுகாத்தி,
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று பிற்பகல் ராஜ்கர் பகுதியில் தண்ணீர் குழாய் உடைந்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவுகாத்தி வர்த்தகக் கல்லூரி ஆர்.ஜி.பருவா பிரதான சாலையில் குழாய் உடைந்துள்ளது. தண்ணீர் குழாய் உடைந்ததில் தண்ணீர் பீய்ச்சியடித்து நீர்வீழ்ச்சி போல் காட்சியளிக்கிறது.
மேலும் தண்ணீர் அதிக அளவில் சாலையில் வீணாக செல்வதையும் வீடியோக்களில் காண முடிகிறது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்குப்பட்டுள்ளது. மேலும் உயிர் சேதங்கள் மற்றும் யாருக்கும் காயங்களும் எதுவும் ஏற்படவில்லை. மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து உடைந்த தண்ணீர் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்கட்டமாக அந்தப் பகுதியில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.