கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோய் அதிகரித்துவருவதை தரவுகளில் இருந்து பார்க்கக்கூடியதாக உள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுனர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்துள்ளார்.
நேற்று (11) மட்டக்களப்பில் கிழக்கு மாகாண வைத்திய அதிகாரி அலுவலக எல்லைக்குட்பட்ட பல பிரதேசங்களில் பதிவாகியுள்ள டெங்கு தொற்று நிலைமை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே அவர்; மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த தொற்றானது இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், டெங்கு நோய்க்கு எதிரான போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.