கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட விஐபி-க்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் தகவல்களும் சமூக வலைதளத்தில் பகிரங்கமாகப் பகிரப்பட்டுள்ளது. ப. சிதம்பரம், ஜெயராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், கனிமொழி, அண்ணாமலை, கார்த்தி சிதம்பரம் மற்றும் பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்ட ஏரளாமான பிரபலங்களின் வாக்காளர் அடையாள அட்டை விவரம், பாஸ்போர்ட் எண், ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து தரவுகளும் பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்த தரவுகள் எதுவும் மத்திய அரசு வசம் இல்லை என்று […]